Tuesday, January 8, 2013

கள்ளதுப்பக்கியின் நிலைமை

கமலஹாசனிடம் பணிபுரிந்த இயக்குனர் கள்ளதுப்பக்கி என்னும் படத்தை புதுமுகங்களை வைத்து எடுத்தார். அப்படி ஒரு படம் இருப்பதே பலருக்கு தெரியாது இருந்தது. இந்நிலையில் எ.ஆர் .முருகதாஸ் விஜயை வைத்து இயக்கம் தனது படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைத்தார்.





நாங்கள் ஏற்கனவே கள்ளதுப்பக்கி  என்று பெயர் வைத்திருக்கும் போது துப்பாக்கி என்று தலைப்பு வைக்க கூடாது என்று கள்ளதுப்பக்கியின் இயக்குனர் லோகியாஸ் வழக்கு தொடர்ந்தார். இதனால் கள்ளதுப்பாக்கிக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்தது. விஜயின் துப்பாக்கியும் இதனால் முழுமையடையாமல் இழுத்துசென்றது. விஜய் ரசிகர்கள் ஆவலுடன் துப்பாக்கியை எதிர்பாத்தனர். 2012 ஆம் ஆண்டில் வெளியான பில்லா 2, மாற்றான், தாண்டவம், போன்ற பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசயாக தோல்வியை தழுவ ஆண்டின் கடைசி பெரிய ஹீரோவின் படமான துப்பாக்கியை அனைவரும் எதிர்பாத்தனர். அனால் படம் ஆரம்பத்திலிருந்து ரிலிஸ் ஆகும் வரை பல பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக தீபாவளிக்கு வெளியானது. படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பிடித்தவண்ணம் துப்பாக்கி நன்றாக வெடித்தது. 2012 இன் மாபெரும் வெற்றிப்படமாகவும் எந்திரன், சிவாஜிக்கு அடுத்து அதிகமாக வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்தது.

வெளியான பின்பும் முஸ்லிம் பிரச்சனையில் மாட்டிக்கொண்டாலும் படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.விஜயின் சினிமா வரலாற்றில் மிக பெரிய வெற்றி படமாகவும் அமைந்துள்ளது.ஆனால் துப்பாக்கியின் மூலம் இலவசமாக விளம்பரம் பெற்ற கள்ளத்துப்பாக்கி அதன் பின்பு காணமல் போனது டிசம்பர் 21 இல் ரிலிஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது அனால் ரிலிஸ் ஆகவில்லை. இதோ அதோ என்று சொல்லி 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரிலிஸ் செய்யப்பட்டது. ஆனால் ரசிகர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை. பலருக்கு இன்னும் படம் ரிலிஸ் ஆகியத இளைய என்று குட தெரியாத அளவுக்கு அதன் விளம்பரம் முடங்கிப்போனது. இந்நிலையில் படத்தை ஒரு சிலர் பார்த்து வன்முறையின் உச்சம் என்று கூறியுள்ளனர். பலர் இப்படத்தை கண்டுகொள்ளாத நிலையில் ஒரு சிலர் இதற்கு விமர்சங்கள் எழுதியுள்ளனர். அதுவும் எதிர்மறையாக தான் இருக்கிறது. என் தலைவரின் படத்திற்கு இடையுறு செய்த அவர்களுக்கு இது தேவை தான் என விஜய் ரசிகர்கள் ஏளனம் செய்கிறார்கள்.

2 comments: